சிட்னியில் மற்றுமொரு குழந்தை பராமரிப்பு நிலையம் இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.
நான்கு நாட்களுக்கு முன்னர் குழந்தை பராமரிப்பு நிலையமொன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையிலேயே மேற்படி சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவந்துள்ளனர். கட்டத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.