குயின்ஸ்லாந்து, சன்ஷைன் கோஸ்டில் கத்திக்குத்து தாக்குதலில் நபரொருவர் பலியாகியுள்ளார்.
57 வயதான குறித்த நபரின் மார்பு பகுதியில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டுள்ளன. சம்பவ இடத்திலேயே அவர் இறந்து கிடந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர். சிசிரிவி கமரா காட்சிகளும் ஆராயப்பட்டுவருகின்றன.