மது அருந்திவிட்டு பேர்த் விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர், கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
34 வயதான குறித்த நபர் மதுபோதையில் இருந்தாகவும், சிறார்கள் முன்னிலையில் தொலைபேசியில் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது நடத்தை காரணமாக அவ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் மீண்டும் அங்கு வந்து குழப்பம் விளைவித்துள்ளார்.
ஊழியர்களுடனும் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
அவர் பேர்த் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டார். அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.