சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி, அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின் பிங்குடன் இன்று இரு தரப்பு சந்திப்பில் ஈடுபட்டார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் பொருட்கள்மீது சீனாவால் விதிக்கப்பட்ட கூடுதல் வரி விதிப்புகள் நீக்கப்பட்டமைக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
பொருளாதாரம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு இரு நாடுகளின் உறவு மிக முக்கியம் என்பதனை இரு நாட்டு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
முதலீட்டு வாய்ப்புகள் பற்றியும் ஆராயப்பட்டது. அதேபோல ஆஸ்திரேலியாவில் சீன நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது என அறியமுடிகின்றது.
மேற்படி சந்திப்பின் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். பிரதமர் அந்தோனி அல்பானீஸி, சீன பெருஞ்சுவரை நாளை பார்வையிடவுள்ளார்.