சீனா சர்வதேச சட்டத்தை மீறவில்லை எனவும், அதற்கு உட்பட்ட வகையில் இராணுவ பயிற்சிகளை மேற்கொள்வதற்குரிய தார்மீக உரிமை தமது நாட்டுக்கு உள்ளது எனவும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
சீனாவுக்கு ஆறு நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர், அந்நாட்டு ஜனாதிபதியை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பிரதமருக்கு விருந்துபசாரமும் வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலிய கடற்பரப்புக்கு அப்பால் உள்ள கடற் எல்லையில் சீன இராணுவம் பயிற்சி நடத்தியமை தொடர்பில், தமக்கு முன்கூட்டியே அறிவிக்காமை தொடர்பில் கன்பரா ஏற்கனவே அதிருப்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பிலும் இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.
' சீனா சர்வதேச சட்டத்தை மீறவில்லை, எனினும், அறிவிப்பு மற்றும் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகள் உட்பட அது நடந்த விதம் குறித்து நாங்கள் கவலைப்பட்டோம்." - என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த சீன ஜனாதிபதி,
'ஆஸ்திரேலியா பயிற்சிகளில் ஈடுபடுவது போலவே சீனாவும் பயிற்சிகளில் ஈடுபட்டது." எனக் குறிப்பிட்டுள்ளார். இது விடயம் தொடர்பான ஆஸ்திரேலியாவின் கரிசனைக்கு மதிப்பளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வர்த்தக வரி தொடர்பில் இதன்போது பேசப்பட்டதா என எழுப்பட்ட கேள்விக்கு,
' சர்வதேச வர்த்தகத்தின் முக்கியத்துவம் பற்றி இருவரும் கலந்துரையாடினோம்." - என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி குறிப்பிட்டார்.
அதேவேளை, ஆசிய - பசுபிக் பொருளாதார உச்சி மாநாட்டை 2026 இல் சீனாவில் நடத்துவதற்கு ஆஸ்திரேலியா தமது ஆதரவை வெளிப்படுத்தியது.
சுதந்திர வர்த்தகம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு விதிகளை கூட்டாகப் பாதுகாக்கவும் ஆஸ்திரேலியா சீனாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது என பிரதமர் தெரிவித்தார் என சீன வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.