தாய்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 600 கிலோ ஐஸ் போதைப்பொருள் இறக்குமதி செய்த மூன்று ஆண்கள்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிரிஸ்பேன் துறைமுகத்துக்கு கடந்த 4 ஆம் திகதி வந்த சரக்கு கப்பலை எல்லை படை அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தினர்.
எட்டு மரப் பெட்டிகளில் துணிகளுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டே போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளது.
200 துணி பொதிகளுக்குள் 597 கிலோ ஐஸ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து இது தொடர்பில் விசாரணை வேட்டை இடம்பெற்றது. நியூ சவூத் வேல்ஸை சேர்ந்த 22,24 மற்றும் 28 வயதுடைய மூன்று இளைஞர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். மூவரும் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டது. மூவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை ஆகஸ்ட்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.