பிரிஸ்பேனில் நகைக்கடையொன்றில் ஆயுத முனையில் கொள்ளையில் ஈடுபட்ட சிறார் ஒருவர் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகமூடிகளை அணிந்து உலேகக் கம்பிகளை தாங்கி சென்றே குறித்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.
அலுமாரிகளை உடைத்து, தங்க நகைகளை இக்குழு களவாடியுள்ளது. அதன்பின்னர் களவாடப்பட்ட வாகனமொன்றில் குழுவினர் தப்பிச்சென்றுள்ளனர். கடையில் இருந்த 38 வயது பணியாளர் ஒருவர்மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜுன் 10 ஆம் திகதி நடைபெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்தனர்.
இந்நிலையில் ஜுலை 11 முதல் 15 வரை பிரிஸ்பேன் மற்றும் லோகன் பகுதிகளில் விசேட தேடுதல் வேட்டை இடம்பெற்றது. இதன்போது கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.