பெயர் மோசடி செய்து, விமானத்தில் பயணம் செய்த பிரிஸ்பேன் நபருக்கு ஆயிரத்து 700 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் இருந்து பிரிஸ்பேன் செல்லும் விமானத்திலேயே இவர் தனது நண்பரின் பெயரில் பயணிக்க முற்பட்டுள்ளார்.
அத்துடன், ஹோபார்ட்டிலிருந்து சிட்னிவரை அவர் போலி பெயரில் பயணித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
45 வயதான குறித்த நபர் தொலைபேசியில் உரையாற்றும்போது வெடிகுண்டு பற்றி குறிப்பிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விமானத்தை பரிசோதித்தபோது அச்சுறுத்தலாக எதுவும் இருக்கவில்லை. பின்னர் அவர் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டார்.
போலி பெயரில் ரிக்கெட் பெற்றமை, விமான நிலையத்தில் போலி தகவல்களை பரப்பியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.
வழக்கு விசாரணையின்போது தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.