சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி, தனது வருங்கால காதல் மனைவியுடன் இணைந்து சீனப் பெருஞ்சுவரை பார்த்து மகிழ்ந்தார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கோஃப் விட்லம், 1971 இல் சீனாவுக்கு சென்றவேளை, சீன பெருஞ்சுவரை பார்க்க சென்றிருந்தார்.
மேற்குலக சார்பு கொள்கையை பின்பற்றி வந்த அவர், ஆஸ்திரேலிய வெளிவிவகாரக் கொள்கை மறுசீரமைக்கப்படும் என்ற தகவலை இதன்மூலம் வழங்கினார்.
லிபரல் ஆட்சியின்கீழ் பீஜிங் மற்றும் கன்பராவுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால் ஆஸ்திரேலிய பொருட்களுக்கு சீனாவால் கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டிருந்தன.
லேபர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு சீனாவுடனான உறவை சீர்செய்யும் முயற்சியில் இறங்கியது. வரிகளையும் குறைத்துக்கொண்டது.
எனவே, சீனாவுடனான உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் வகையிலேயே பிரதமர் சீன பெருஞ்சுவருக்கு சென்றிருப்பார் எனக் கருதப்படுகின்றது.
அதேபோல பிரிட்டன் எலிசபெத் மகாராணி, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ரஷ்ய ஜனாதிபதி புடின் உள்ளிட்ட தலைவர்களும், இராஜதந்திர ரீதியிலான தகவலை வெளிப்படுத்துவதற்காக சீன பெருஞ்சுவரை பார்வையிட சென்றிருந்தனர்.
அதேவேளை, சீனாவில் உள்ள பண்டா கரடி சரணாலத்தையும் பிரதமர் அல்பானீஸி பார்வையிட்டார். இந்த விவகாரம்கூட பண்டா கரடி இராஜதந்திரமாகவே கருதப்படுகின்றது.