ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்றுவரும் முக்கியமான இராணுவப் பயிற்சிகளை சீனா தற்போது உளவு பார்க்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்தார்.
எனினும், அதற்குரிய சாத்தியம் முழுமையாக இல்லை என்ற விடயத்தை பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தவில்லை. எனவே, எதிர்காலத்தில் அவ்வாறு செய்யக்கூடும் என்ற ஊகத்தை இதன்மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா உட்பட 19 நாடுகளை சேர்ந்த 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட படையினரை உள்ளடக்கிய வகையில் ஆபரேஷன் தாலிஸ்மேன் சேபர் கூட்டு இராணுவ பயிற்சி நடவடிக்கை இம்மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகி, ஆகஸ்ட் ஆரம்பம்வரை நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் சீனா தற்போது உளவு பார்க்கவில்லை எனவும், எதிர்காலத்திலும் அவ்வாறு செய்யாது என உறுதியாக கூறமுடியாது எனவும் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.