சிட்னி ரயிலில் யுவதிகள்மீது 'பெப்பர் ஸ்பிரே" தெளித்து - தாக்குதல் நடத்தினார் எனக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தின்போது 22 வயதுடைய இரு பெண்களை இளைஞர் ஒருவர் அணுகியுள்ளார்.
இவ்வாறு அணுகிய அவர் யுவதிகள்மீது 'பெப்பர் ஸ்பிரே" தெளித்து தாக்குதல் நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட இரு யுவதிகளும் உடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் 20 வயது இளைஞன் ஒருவர் பரமட்டா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பெப்பர் ஸ்ரேயும் மீட்கப்பட்டுள்ளது.
பிணை மறுக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞனை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.