அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நூற்றுக்கணக்கான துப்பாக்கி பாகங்களை இறக்குமதி செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குயின்ஸ்லாந்து நபர், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
கடந்த ஜுன் 26 ஆம் திகதி பிரிஸ்பேன் விமான நிலையத்தில் 34 வயது நபரொருவர் சோதனைக்குட்படுத்தப்பட்டார். அவர் கொண்டுவந்த பொதிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கி உதிரிப்பாகங்கள் மீட்கப்பட்டன.
துப்பாக்கி பாகங்களை இவ்வாறு கொண்டுவந்து, அவற்றை பொருத்தி ஒரு துப்பாக்கியை 20 ஆயிரம் டொலர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு விற்பதற்கு அவர் திட்டமிட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது.
துப்பாக்கி பாகங்கள் கடத்தல் உட்பட அவருக்கு எதிராக 9 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்பட்சத்தில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.