தற்காலிக விசா இரத்து செய்யப்பட்ட நிலையில் சிட்னியில் குடியேற்ற தடுப்பு மையத்தல் வைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனப் பெண் விடுவிக்கப்பட்டுள்ளார்.
61 வயதான மஹா அல்மாஸ்ரி என்ற குறித்த பெண் 2024 பெப்ரவரியில் காசாவில் இருந்து தப்பி வந்துள்ளார். அவர் வருகைதரு விசாவில் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்தார்.
பின்னர் அவர் பாதுகாப்பு விசாவுக்கு விண்ணப்பித்தார். அவருக்கு 2024 ஜீனில் பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டது.
எனினும், குணாதிசயத் தேர்வில் அவர் தோல்வி அடைந்ததால் மத்திய உதவி தனிப்பட்ட முறையில் குறித்த விசாவை இரத்து செய்ததாகவும், இதனையடுத்து அவர் குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டார் எனவும் கூறப்படுகின்றது.
ஆஸ்திரேலியா எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு, வில்லாவுட் தடுப்பு மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விசா இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் அரசு எவ்வித கருத்தையும் தெரிவிக்காது என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.