காசாவில் உதவி பெற முற்பட்டவர்களில் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையால்கூறப்படும் சம்பவங்கள் நியாயப்படுத்த முடியாதவை . இஸ்ரேல் அதன் சொந்த நடவடிக்கைகளால் சர்வதேச ஆதரவை இழந்து வருகிறது என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸி தெரிவித்தார்.
சீனாவிலிருந்து தனது ஆறு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு புறப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
'ஆஸ்திரேலியா ஒரு நீண்டகால ஆதரவாளர் - மேலும் இஸ்ரேல் அரசை உருவாக்குவதில் உண்மையில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. அதே சமயம் மத்திய கிழக்கில் இஸ்ரேல் அரசு மற்றும் பாலஸ்தீனம் அரசு. இரண்டு நாடுகளை ஆதரித்து வருகிறது என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.
இஸ்ரேல் , ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இல்லாமல் பாதுகாப்பான எல்லைகளுக்குள் தொடர்ந்து இருக்க வேண்டும்.
அதேசமயம் பாலஸ்தீனப் பிரச்சினையைக் கையாளாமல் மத்திய கிழக்கில் அமைதி இருக்க முடியாது என்று கூறிய ஜான் ஹோவர்டு வரையிலான இரு கட்சி நிலைப்பாடாகவும் இருந்து வருகிறது." - எனவும் அவர் கூறினார் .
காசா மீதான இஸ்ரேலின் அடுத்தடுத்த இராணுவத் தாக்குதலில் கிட்டத்தட்ட 57,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் கிட்டத்தட்ட 2.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து பசி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சபா.தயாபரன்.