வடக்கு குயின்ஸ்லாந்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காக நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நபரொருவர் கத்தியுடன் அச்சுறுத்தும் வகையில் காணப்படுகின்றார் என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவ்வேளையில் ஆயுதம் சகிதம் அதிகாரிகளை நோக்கி அவர் வந்தவேளையிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
அவரது மார்பு மற்றும் கால் பகுதிகளில் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் காணப்படுகின்றன. சம்பவ இடத்திலேயே அவருக்கு முதுலுதவி அளிக்கப்பட்டாலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு ஏதுவான காரணிகள் பற்றி விசாரணை நடத்தப்படுகின்றது.