வடக்கு மெல்பேர்ணில் நடைபெற்ற இரு கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.
17 வயதுடைய சிறுவனும், இளைஞர் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
17 வயது சிறுவன்மீது பல்பொருள் அங்காடியொன்றுக்குள் வைத்தே நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரி தலைவமறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்குரிய விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
சனிக்கிழமை நடைபெற்ற மற்றுமொரு கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 33 வயது இளைஞர் காயமடைந்துள்ளார்.
தாக்குதலை நடத்தியவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.