இஸ்ரேல்மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தி ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் இடம்பெற்றது.
ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற பின்னர், நாடாளுமன்றம் இன்று முதன்முறையாக கூடியது.
இந்நிலையிலேயே நாடாளுமன்றத்துக்கு வெளியில் அணிதிரண்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள், இஸ்ரேல்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
அத்துடன், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இஸ்ரேல்மீது தடைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் லேபர் அரசை வலியுறுத்தினர்.
இப்போராட்டத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அதேவேளை, காசாவில் போர் நிறுத்தம் கோரி வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் ஆஸ்திரேலியா கைச்சாத்திட்டமை தொடர்பில் எதிரணி கூட்டணி அதிருப்தி வெளியிட்டுள்ளது.