" உண்மையை ஒருபோதும் புதைக்க முடியாது. செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்." - என்று ஆஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர் David Shoebridge வலியுறுத்தியுள்ளார்.
'இலங்கையில் தமிழ் மக்கள்மீது கட்டாயமாக நடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் இனப்படுகொலையை நினைவூட்டும் வகையில் செம்மணி புதைகுழி அமைந்துள்ளது.
29 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. நீதி நிலைநாட்டப்படவில்லை.
எனவே, செம்மணி உட்பட இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச அளவில் கண்காணிக்கப்படும் தடயவியல் விசாரணை அவசியம்." - எனவும் அவர் வலியுறுத்தினார்.