உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் ஆஸ்திரேலியா ஏழாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டு பட்டியலில் இவ்வருட ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா ஆறாவது இடத்தை பிடித்திருந்தது. இந்நிலையிலேயே தற்போது ஏழாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு என்பது சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் தரவுகள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இது விசா இல்லாமல் மற்றும் வருகை விசா வாயிலாக செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்கிறது.
மேற்படி குறியீட்டு பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகியவை 190 நாடுகளுக்கான அணுகலுடன் இரண்டாம் இடத்தில் உள்ளன.