" போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய ஜனாதிபதி புடினை நேரில் சந்தித்து பேச தயாராக உள்ளேன்." என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளிடம் கோரிக்கை விடுத்துவருகின்றார்.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி முயற்சித்துவருகின்றார். ஆஸ்திரேலியாவுடன் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் போரை முடிவுக்கு கொண்டுவர, ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தயாராக இருக்கிறேன். உக்ரைன் இந்த போரை ஒருபோதும் விரும்பவில்லை. மேலும் போரை தொடங்கிய ரஷ்யா தான் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்." - என்று உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நிபந்தனை அடிப்படையிலான போர் நிறுத்தத்துக்கே ரஷ்யா தரப்பு தயாராக உள்ளது என தெரியவருகின்றது.