காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தீவிர இராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தின் காசாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மனித அத்துமீறல்கள் அரங்கேறுவது தொடர்கிறது.
ராணுவ நடவடிக்கை காரணமாக உறவு, உடமை என அனைத்தையும் இழந்து நிற்கும் காசா வாழ் மக்களுக்கு உண்ண முறையான உணவு கூட கிடைப்பதில்லை.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 81 பேர் உயிரிழந்தனர். அதில் 31 பேர் உதவி தேடி சென்றவர்கள் என்று தெரவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதல் கடந்த 59 ஆயிரத்து 106 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது.
இந்த சூழலில்தான் காசாவில் பட்டினி காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நஸர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அதேவேளை, இஸ்ரேல்மீது தடை விதிக்குமாறு வலியுறுத்தி சபைக்குள் ஆஸ்திரேலிய கிறீன்ஸ் செனட்டர் மெஹ்ரீன் ஃபரூக்கி, இன்று பதாகையை காட்சிப்படுத்தினார்.
ஆளுநரின் உரையின்போதே அவர் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் குறித்த செனட்டருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்ற குழுக்களில் செனட்டை பிரதிநிதித்துவப்படுத்தவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.