குயின்ஸ்லாந்து, பெண் செனட்டரொருவர் தனது குழந்தையை சுமந்த வண்ணம் சபையில் உரையாற்றிய விவகாரம் வைரலாகியுள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சியின் குயின்ஸ்லாந்துக்கான செனட்டராக கோரின் முல்ஹோலண்ட் தெரிவுசெய்யப்பட்டார்.
இவர் நாடாளுமன்றத்தில் நேற்று தனது கன்னி உரையை நிகழ்த்தினார்.
தனது மகனை சுமந்தபடியே அவர் உரையாற்றி இருந்தார். தாய் உரையாற்றும்போது குழந்தை காட்டிய சைகைகள் பார்ப்பவர்களை, அகம் மகிழ வைக்கும் வகையில் உள்ளது.