காசாவில் இடம்பெறும் போர்க்குற்றங்களுக்கு ஆஸ்திரேலியா உடந்தையாக இருக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சரும், துணை பிரதமருமான ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று சுயாதீன எம்.பி., ஹெலன் ஹைன்ஸ், பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
" இஸ்ரேலுடனான வர்த்தகம் தொடர்பில் வெளிப்படைத்தன்மை இல்லை. இது பாலஸ்தீனத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதில் ஆஸ்திரேலியா உடந்தையாக இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.
எனவே, காசாவில் நடக்குமு; போர்க்குற்றங்களில் ஆஸ்திரேலியா உடந்தையாக இல்லை என்பதற்கான உத்தரவாதத்தை வழங்க முடியுமா." எனவும் அவர் வினா தொடுத்தார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர்,
'நீங்கள் விவரிக்கும் விதத்தில் அரசாங்கம் உடந்தையாக இல்லை என்பதற்கான உத்தரவாதத்தை வழங்க முடியும். ஆஸ்திரேலியா ஆயுதங்களை தயாரித்து இஸ்ரேலுக்கு வழங்கவில்லை." - என்று குறிப்பிட்டார்.