ஆஸ்திரேலியாமீது விதிக்கப்பட்டுள்ள வரியானது இரட்டிப்பாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது 10 சதவீத வரி விதிக்கப்படுகின்றது. இது 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது என்றே ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஸ்கொட்டிலாந்தி வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பு மோசமான கொள்கையை பிரதிபளிக்கின்றது என்று ஆஸ்திரேலியாவின் நிழல் வர்த்தக அமைச்சர் கெவின் ஹோகன் விமர்சித்துள்ளார்.
எனினும், இது தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்துடன் பிரதமர் அல்பானீஸி பேச்சு நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, ட்ரம்பின் வரி விதிப்பு எச்சரிக்கை தொடர்பில் லேபர் அரசு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.