காசாவில் பட்டினி நெருக்கடி இல்லை என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அறிவிப்பு, 'புரிந்துகொள்ள முடியாத கூற்று" - என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
அத்துடன், அது தொடர்பில் கடும் விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.
பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் செல்வதை இஸ்ரேல் கட்டுப்படுத்துவது பற்றி பிரதமர் கவலை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் அரசுமீது ஆஸ்திரேலியா தடைகளை விதிக்க வேண்டும் என கிறீன்ஸ் கட்சியின் வலியுறுத்திவரும் சூழ்நிலையிலேயே பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.