பொலிஸாரின் தடைகளையும்மீறி திட்டமிட்ட அடிப்படையில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்படும் என்று பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கை குழு இன்று அறிவித்துள்ளது.
வார இறுதியில் சிட்னி துறைமுக பாலம் வழியாகவே பேரணியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மேற்படி பாலம் வழியாக 10 ஆயிரம் பேர்வரை அணிவகுத்து செல்லக்கூடும் என்று ஏற்பாட்டாளர்கள், பொலிஸாரிடம் விண்ணப்பித்து, அதற்குரிய அனுமதியை கோரி இருந்தனர்.
எனினும், இதற்கு பொலிஸ் தரப்பில் பச்சைக்கொடி காட்டப்படவில்லை. பொது மக்கள் பெருவாரியாக ஒன்றுகூடுவது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், இவ்விவகாரத்தை உயர்நீதிமன்றம் கொண்டுசெல்லவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
ஆனால் எத்தடை வரினும் போராட்டம் நடத்தப்படுவது உறுதி என்று அறிக்கையொன்றின் ஊடாக பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. எனினும், இப்போராட்டம் தொடர்ந்தால் சிட்னியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.