மெல்பேர்ணிலுள்ள இஸ்ரேல் ஜெப தேவாலயத்தில் நடந்த தீ வைப்பு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், தீ வைப்பு, உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் நடத்தை மற்றும் வாகன திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.
தேவாலயத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மூன்று நபர்களில் இவரும் ஒருவர் என தெரியவந்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றன.
விக்டோரியா பொலிஸார், பெரடல் பொலிஸார், கூட்டு பயங்கரவாத நடவடிக்கை குழு மற்றும் புலனாய்வு பிரிவு என்பன விசாரணைகளை நடத்திவந்தன. தாக்குதல் சம்பவத்துடன் வெளிநாட்டு தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் தற்போது மற்றுமொரு இளைஞர் இன்று சிக்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.