இரு இளைஞர்களை பாலியல் துஷ் பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் நியூ சவூத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் இன்று கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
44 வயதான கேரத் வார்டூ என்ற எம்.பியின் பிணையை இரத்து செய்யுமாறுகோரி நீதிமன்றத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்தே கைது இடம்பெற்றுள்ளது.
2013 ஆம் ஆண்டில் 18 வயது இளைஞர் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார் என இவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு மது வழங்கிவிட்டு, பின்னர் பலவந்தமாக வல்லுறவுக்குட்படுத்தினார் என குறித்த இளைஞர் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின்னர் 2015 ஆம் ஆண்டிலும் அவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் 24 வயது இளைஞர் ஒருவரை, துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையிலேயே, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குற்றவாளியென, கடந்த வெள்ளிக்கிழமை ஜுரிகள் முடிவெடுத்தனர்.
கடும் நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானவேளையிலேயே அவருக்கான பிணை மறுக்கப்பட்டு, கைது இடம்பெற்றுள்ளது.
இவருக்கான தண்டனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது. இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் துறக்க வேண்டும் என்ற அழுத்தமும் வலுத்துள்ளது.