அகதிகளுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்ட fast track திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர் David Shoebridge தெரிவித்தார்.
“ மிகவும் கொடூரமான fast track செயன்முறையால் பாதிக்கப்பட்ட ஏ.எல்.ஆர்.சி குழவை இவ்வாரம் சந்தித்தேன். 2012 ஆம் ஆண்டில் நஜீஸும் , ஹசன் நுஸ்ரத்தும் ஈரானில் இருந்து பாதுகாப்பு தேடி ஆஸ்திரேலியா வந்தனர்.
நுஸ்ரத் பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். fast track காரணமாக அவருக்கு தேவையான உதவிகளைப் பெற முடியாதுள்ளது. இவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.” – எனவும் செனட்டர் David Shoebridge
" தமிழ் அகதிகள் செயற்பாட்டாளர்களையும் சந்தித்தேன். அவர்களின் கோரிக்கைகள் செவிமடுக்கப்பட்டன.
அவர்கள் அன்புக்குரியவர்களை இழந்துவிட்டனர். இங்கு வந்த பிறகும் நிம்மதியற்ற வாழ்வே உள்ளது என அவர்கள் என்னிடம் சுட்டிக்காட்டினார்கள்.
சுதந்திரமாக வாழ்வதற்குரிய உரிமையையே அவர்கள் கோருகின்றனர். எனவே, இந்த fast track செயற்முறையால் இன்னும் எத்தனைப் பேரை இழக்கப்போகின்றோம். எனவே, இவர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்பட வேண்டும்.” – எனவும் செனட்டர் David Shoebridge வலியுறுத்தினார்.
Displaced Workers Collective எனும் அமைப்பின் பிரதிநிதிகளான தனுராஜ், திருமதி ரதி ஆகியோர் கடந்தவாரம் இவரை சந்தித்து, அகதிகளின் நிலை பற்றி எடுத்துரைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.