பொலிஸ் காவல் மற்றும் சிறை வைப்பின்போது பூர்வக்குடி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் மீள் நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் - என்று சுயாதீன செனட்டர் லிடியா தோர்பே வலியுறுத்தினார்.
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் காவலின்போது 17 பூர்வக்குடி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையை செனட்டர் லிடியா தோர்பே, செனட்டில் இன்று முன்வைத்தார்.
ராயஸ் கமிஷன் அறிக்கையின் பிரகாரம் 1991 காலப்பகுதி முதல் காவலில் இருந்த 602 பூர்வக்குடி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் செனட்டர் வலியுறுத்தினார்.
பூர்வக்குடி மக்கள் சிறைவாசம் அனுவிப்பது மற்றும் காவலின்போது உயிரிழப்பது போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.