பாலியல் துஷ்பிரயோக சர்ச்சையால் நியூ சவூத் வேல்ஸ் மாநில சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் கேரத் வார்டு பதவி விலகிய நிலையில், அவரது தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கியாமா தொகுதியில் எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இரு இளைஞர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என இவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்தது.
இந்நிலையில் அவர் கடந்த மாதம் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டார். பிணை மறு நிராகரிக்கப்பட்டதையடுத்து காவலில் வைக்கப்பட்டார். அவருக்கான தண்டனை தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கிடையில் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு மாநில நாடாளுமன்றம் தயாரான நிலையில், அவர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.