ரொக்க வட்டி வீதத்தை 0.25 சதவீதத்தால் ஆஸ்திரேலிய மத்திய வங்கி குறைத்துள்ளது.
ஆஸ்திரேலிய மத்திய வங்கியின் நிதிச்சபைக் கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது.
பொருளாதார நிலைவரங்கள் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர், ரொக்க வட்டி வீதமானது 3.85 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மற்றும் மே மாதங்களிலும் மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைத்தது. இந்நிலையில் இவ்வருடத்தில் மூன்றாவது முறையாக இன்று வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.