மெல்பேர்ண் கிழக்கில் வீடொன்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட ஆணும், பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
39 வயதான ஏதீனா ஜார்கோபௌலோஸ் மற்றும் அவரது துணையான 50 வயதான ஆண்ட்ரூ கன் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.ஏதீனா 5 மாத கர்ப்பிணியெனவும் தெரியவந்துள்ளது. அவர் தலை துண்டிக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளார்.
இவர்களை கொலை செய்தார் என சந்தேகிக்கப்படும் 34 வயது நபர் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. இக்கொலையுடன் வேறு நபர்கள் தொடர்பு பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கவில்லை.