சிட்னி விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்ட விக்டோரியாவை சேர்ந்த 41 வயது நபர் கைது செய்யப்பட்டு, அவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய முனையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்ட குறித்த நபரை பொலிஸார் அணுகியபோது, அவர் ஆக்ரோஷமாக நடந்துகொண்டார்.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையின்போது பொலிஸாரின் துப்பாக்கி தற்செயலாக இயங்கியுள்ளது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கி இயங்கிய சம்பவம் பற்றி விசாரணை இடம்பெறுகின்றது.
பொலிஸ் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபருக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.