ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளுக்கு செல்வதற்கு ஆஸ்திரேலிய பிரதிநிதிகளுக்கு விசா அனுமதி வழங்க இஸ்ரேல் மறுத்துள்ளது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரி பெனி வோங் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவு மற்றும் இஸ்ரேலிய அரசியல் பிரமுகருக்கான விசா மறுப்பு என்பவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இஸ்ரேலால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆஸ்திரேலிய அதிகாரிகளின் விசா இரத்து செய்யப்பட்டுள்ளது. பாலஸ்தீன விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை வெட்கக்கேடானது என்று இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இஸ்ரேலின் நடவடிக்கை நியாயமற்ற எதிர்வினை என ஆஸி. வெளிவிவகார அமைச்சர் விமர்சித்துள்ளார்.