மெல்பேர்ண் தென்கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 4.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
39 வயது நபருக்கு துணை மருத்துவர்கள், முதல் உதவி வழங்குவதற்கு முற்பட்டாலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
தாக்குதல் நடத்திய நபர் தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை இடம்பெற்றுவருகின்றது.