விக்டோரியா வடக்கில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்டி அவென்யூவிலுள்ள வீடொன்றில் இருந்தே இன்று அதிகாலை 32 வயது பெண்ணொருவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு தெரிந்தவர் என நம்பப்படும் 45 வயது ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டுக்குள் இரு குழந்தைகளும் இருந்துள்ளன. அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
விக்டோரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.