ஆஸ்திரேலியாவுக்குள் 390 கிலோ ஐஸ் போதைப்பொருள் இறக்குமதி செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய ஈரான் பிரஜை கைது செய்யப்பட்டு, நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து 61 வயதான குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட வேண்டும்.
இரும்பு பாகங்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்தே ஈரானில் இருந்து சிட்னிக்கு போதைப்பொருள் கடத்திவரப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புபட்ட நபர் நேற்று முன்தினம் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் ஜேர்மனில் இருந்து ஆஸ்திரேலியா வந்து இங்கு தங்கியிருந்தார் என தெரியவருகின்றது.