'நான் மற்றைய நாட்டு தலைவர்களை மரியாதையுடனேயே நடத்துகின்றேன். உரிய வகையில் இராஜதந்திர தொடர்பு பேணப்பட்டுவருகின்றது." - என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனீ அல்பானீஸி தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமரின் கூற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" காசா தொடர்பில் உலகளவில் கவலை அதிகரித்துவருகின்றது. வன்முறை சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே உலகம் விரும்புகின்றது. ஆஸ்திரேலியர்களும் அதைத்தான் விரும்புகின்றனர்." - என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமரின் கூற்றை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கண்டித்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேலுடனான உறவு எவ்வாறு சீர்செய்யப்படும் என்பதை பிரதமர் விவரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமரின் கூற்றை எதிர்க்கட்சி தலைவர் வரவேற்காதபோதிலும், ஆஸ்திரேலிய பிரதமர் சர்வதேச உறவை தவறாக கையாண்டுள்ளார் என விமர்சித்துள்ளார்.
அதேவேளை, இஸ்ரேல் பிரதமரின் கூற்றுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.