சிட்னியில் பாதாளகுழு தலைவரை சுட்டுக்கொலை செய்த நபரை நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
32 வயதான தாவூத் ஜகாரியா என்ற பாதாள குழு தலைவர் கடந்த மே மாதம் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்தனர். இதற்கமைய 19 வயது இளைஞன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேற்படி கொலைச்சம்பவத்தில் இவர் முக்கிய சூத்திரதாரியாக செயற்பட்டுள்ளார்.
நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துவருகின்றன.
சிட்னி தென்மேற்கு பகுதியில் ஜி - 7 எனும் புதிய பாதாள குழுவொன்று தோற்றம் பெற்றுள்ளது. அக்குழுவை குறிவைத்து பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.
இன்று கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞனுக்கு ஜி - 7 குழுவுடன் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.