ஆஸ்திரேலியா மற்றும் வியட்நாமுக்கிடையிலான கூட்டாண்மை மேலும் வலுப்படுத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்தார்.
வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார உறவுகள் பற்றி இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
இச்சந்திப்பு தொடர்பில் தனது எக்ஸ் தள பக்கத்திலேயே பெனி வோங் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வியட்நாமுடன் தொழில்நுட்பம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா கைச்சாத்திட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.