நியூ சவூத் வேல்ஸ், ப்ளூமவுண்டனில் இரு ஆண்கள்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வயோதிப பெண்மீது கொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்துக்குசென்றவேளை அங்கு இரு ஆண்கள் காயமடைந்த நிலையில் காணப்பட்டனர்.
அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் 67 வயது பெண்ணொருவரும் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். அவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் குறித்த பெண் வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டார். அவர்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. இன்று நீதிமன்ற நடவடிக்கை இடம்பெறுகின்றது.