சிட்னி ரயிலில் பயணித்த தமக்கு எதிராக இனவெறி துஷ்பிரயோகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது என பாலஸ்தீன பின்புலம் கொண்ட இரு ஆஸ்திரேலியர்கள் முறையிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணி நடந்த நாளிலேயே மேற்படி சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர்களான ஷாமிக் மற்றும் மஜேத் பத்ரா ஆகியோரே இவ்வாறு இவ்வாறு இனவெறி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
பாலஸ்தீன விடுதலையைக் குறிக்கும் சால்வையை இவர்கள் அணிந்திருந்தலால் இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகின்றது.
தமது குடும்பத்தினரும் காசாவில் உள்ளனர். காசா மக்களுக்காக நடந்த போராட்டத்தில் நாம் பங்கேற்றோம். அதன்பின்னர் ரயில் ஏறி செல்ல முற்படுகையிலேயே இனவெறி துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நான்கு ஆண்களே தம்மை அச்சுறுத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.