மெல்பேர்ணில் நடந்த போராட்டத்தின்போது பூர்வக்குடி மக்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை பூர்வக்குடி அமைச்சர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
குடியேற்றத்துக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்திய நவ - நாஜிகள் மற்றும் தீவிர வலதுசாரிகள், பூர்வக்குடி மக்களின் போராட்ட முகாமுக்குள் புகுந்தனர்.
தடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். பூர்வக்குடி மக்களின் கொடியும் அவமதிக்கப்பட்டது. இத்தாக்குதலில் நால்வர் காயமடைந்தனர்.
இந்நிலையிலேயே மேற்படி சம்பவத்தை பூர்வக்குடி அமைச்சர் கண்டித்துள்ளார்.