ரஷ்யாமீதான உக்ரைனின் சட்டவிரோத படையெடுப்புடன் தொடர்புடைய மேலும் 14 பேருக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.
அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி புடினை கடுமையாக விமர்சித்துவந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவியை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இன்று சந்தித்து கலந்துரையாடுகின்றார். எதிர்க்கட்சி தலைவர் சூசன் லேயும் அவரை சந்திக்கின்றார்.
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவல்னியின் மரணம் தொடர்பில் சுயாதீன விசாரணையை நடத்த ரஷ்யா தவறிவிட்டது, அவரின் மரணத்துக்குரிய பொறுப்பை ஜனாதிபதி புடின் ஏற்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்தார்.
நீதிக்காக போராடும் அவரது மனைவியின் துணிச்சலையும் அவர் பாராட்டியுள்ளார்.
அத்துடன், ரஷ்யாவில் எதிரணி அரசியலை மௌனப்படுத்திய மற்றும் உக்ரைன்மீதான படையெடுப்பை ஆதரித்த மேலும் 14 பேருக்கு நிதி மற்றும் பயணத்தடைகளை ஆஸ்திரேலியா விதித்துள்ளது.
சர்வதேச சட்டத்திட்டங்களை ரஷ்யா பின்பற்ற வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.