மெல்பேர்ண் வடக்கே வாகனம் மோதி இரு யுவதிகள் பலியாகியுள்ளனர். நடு வீதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கங்காருவுக்கு உதவ முற்பட்டவேளையிலேயே அவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு 7.30 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்து பரிதவித்துக்கொண்டிருந்த கங்காருவுக்கு உதவும் நோக்கில் காரை நிறுத்திவிட்டு செல்கையிலேயே அவர்களை வாகமொன்று மோதியுள்ளது.
பெவரிட்ஜை சேர்ந்த 30 வயது யுவதி சம்பவ இத்திலேயே உயிரிழந்தார். தாமஸ்டவுனை சேர்ந்த யுவதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
நெடுஞ்சாலைகளில் விபத்துகளில் காயமடையும் விலங்குகளுக்கு, வாகனங்களில் இருந்து இறங்கி உதவுவதற்கு முற்படுவது ஆபத்தான செயல் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விக்டோரியாவில் இவ்வருடத்தில் இதுவரையில் வீதி விபத்துகளில் 203 பேர் பலியாகியுள்ளனர்.