இஸ்ரேலின் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஜெருசலேமில் யிகல் யாடின் தெருவில் உள்ள ரமோத்சந்திப்பில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பேருந்தில் பயணம் செய்த, பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் மீது காரில் வந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.
இதில், 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்ட தகவலின்படி 2 தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் வந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியை சேர்ந்தவர்கள். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ{க்கு ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையுமாறும், இல்லையென்றால் ஹமாஸ் அழிக்கப்படும் என்றும் இறுதி எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அதேவேளை, இத்தாக்குதலை ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.