ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெனீவ் பெல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் கல்வி முறைமையில் மறுசீரமைப்புகளை இவர் மேற்கொண்டிருந்தார். இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புகள் வழுத்தன.
செலவு குறைப்பு தொடர்பில் அவர் தவறான அணுகுமுறையை கையாண்டார் எனவும், இதனால் பலர் தொழிலை இழந்தனர் எனவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளார்.
2024 ஜனவரி மாதமே இவர் 13 ஆவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி விலகல் கடிதத்தை துணைவேந்தர் ஜெனீவ் பெல் கையளித்தார் எனவும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் பல்கலைக்கழக வேந்தர் ஜுலி பிஷப் தெரிவித்தார்.
அத்துடன், இடைக்கால துணை முதல்வராக ரெபேக்கா பிரவுன் செயற்படுவார் எனவும் அவர் அறிவித்தார்.
துணைவேந்தரின் பதவி விலகலை கிறீன்ஸ் கட்சி வரவேற்றுள்ளது. தோல்வியுற்ற பல்கலைக்கழக நிர்வாகத்தை சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.