இந்திய குடியேற்றம் தொடர்பில் செனட்டர் ஜெசிந்தா நம்பிஜின்பா வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே மன்னிப்பு கோரியுள்ளதை ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகம் வரவேற்றுள்ளது.
எனினும், இந்திய சமூகத்துக்கு ஏற்பட்ட தாக்கத்தை சரிசெய்வதற்கு லிபரல் கட்சி இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது எனவும், செனட்டர் நேரடியாக மன்னிப்பு கோராமை கவலையளிக்கின்றது எனவும் அச்சமூகம் குறிப்பிட்டுள்ளது.
' எதிர்க்கட்சி தலைவர் மன்னிப்பு கோரியது நல்லது. அதேபோல சம்பந்தப்பட்ட செனட்டர் இன்னும் மன்னிப்பு கோராமை தவறான நடத்தையாகும்." - என்று ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை, இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறுவது குறித்து வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புகோர மறுத்த செனட்டரை, எதிர்க்கட்சி தலைவர் நிழல் அமைச்சரவையில் இருந்து நேற்று நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.