பிராந்தியக் கூட்டங்களில் பங்கேற்கும் தாய்வானின் உரிமையை பசுபிக் தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பசுபிக் தீவுகள் மன்றத்தில் இருந்து தாய்வானை விலக்குமாறு சீனா அழுத்தம் கொடுத்துவரும் சூழ்நிலையிலேயே அதனை ஏற்பதற்கு பசுபிக் தலைவர்கள் மறுத்துள்ளனர்.
பசுபிக் தீவு தலைவர்களின் மாநாடு சாலமன்தீவுகளில் நடைபெற்றது. இதன்போது முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. காலநிலை தொடர்பான மாநாட் அடுத்த வருடம் நடத்துவதற்கு ஆஸ்திரேலியா முயற்சிக்கின்றது. துருக்கியும் போட்டியில் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவளிப்பதற்கு பசுபிக் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். எனவே, போட்டியில் இருந்து விலகுமாறு துருக்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பசுபிக் தலைவர்கள் கூட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமரும் பங்கேற்றிருந்தார். அவர் முன்கூட்டியே நாடு திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.